இராணுவம் வசமுள்ள காணி விபரம் எமது கட்டுக்கோப்பில் இல்லை : கரவெட்டி பிரதேச செயலாளர்

21 March 2017, Tamil Win

வவுனியா – கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பிலான விபரம் தமது கட்டுக்கோப்பில் இல்லை என பிரதேச செயலாளர் ச.சிவசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேச செயலக பிரிவிற்குள் இராணுவத்தினர் வசமுள்ள காணி விபரங்களை அறிவிக்குமாறு, வவுனியாவை தளமாகக் கொண்டு இயங்கும் இளைஞர் வலையமைப்பு தகவல் அறியும் சட்டம் மூலம் கோரியிருந்தது.

இது தொடர்பில் கரவெட்டி பிரதேச செயலாளர் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எமது பிரிவில் இராணுவத்தினர் வசமுள்ள தனியார், அரச காணிகளின் விபரங்கள் 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான கோரிக்கை தொடர்பான விடயங்கள் எமது கட்டுக்கோப்பில் இல்லாத காரணத்தினால் அதனை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.