சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் பேரணி

IBC Tamil News, 6 December 2016

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற  யுத்தத்திற்கு  இன பாகுபாடே காரணம் என   எவ்ரேல் நிறுவனத்தின்  தொண்டராக கடமையாற்றும்  வனிதா சேனாதிராசா    தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற பேரணயின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட  வைத்தியசாலைக்கு முன்பாக இந்த பேரணி ஆரம்பமாகி இலங்கை செஞ்சிலுவைச் சங்க  காரியாலயத்திற்கு முன்பாக  நிறைவடைந்துள்ளது.

பேரணியை அன்பிற்கும், நட்பிற்குமா வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

பாராபட்சமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்  என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட  இந்த பேரணியில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள்  பல்வேறு  வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர்.

அத்துடன், இளைஞர்களைத் தெளிவுபடுத்தும் முகமாக இலங்கை செஞ்சிலுவைச் சங்க காரியாலயத்திற்கு முன்பாக பல்வேறு  நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த பேரணியில் கலந்து கொண்ட வனிதா சேனாதிராசா சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 20 மாவட்டங்களில் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.