“சுதந்திர பயணம் 2015” நிரந்தர அரசியல் தீர்விற்கான அடிப்படை கொள்கை மாதிரி வரைபு; AFRIEL

Yarl ITR News, 11 December 2015

2015 மார்ழி 10ம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்ற அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ‘சுதந்திர பயணம்’ இளைஞர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டநிரந்தர அரசியல் தீர்விற்கான அடிப்படை கொள்கை மாதிரி வரைபு.

நிரந்தர அரசியல் தீர்விற்கான அடிப்படை கொள்கை மாதிரி வரைபு

இலங்கை நாட்டின் இனங்களுக்கிடையிலான முரண்பாடு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்களே ஆவார். இவர்கள்யுத்த காலத்தின் போது மிகவும் அடக்கி ஒடுக்கப்பட்டனர். ஆயுத யுத்த முடிவின் பின்னரும் அரசாங்கத்தின் இறுக்கமான இரும்புப்பிடிக்குள் இருந்து  விடுபடமுடியவில்லை தத்தமது கருத்துக்களை முன்வைக்கவும் கொள்கைகள் சட்டவாகக்கங்கள் அதன் நடைமுறை தொடர்பில் விவாதிக்கவோ அல்லது கலந்துரையாடவோ இவர்களுக்கு ஓர் பொருத்தமான வெளி அமைந்திருக்கவில்லை. தங்களின் உரிமைகள் தேவைகள் அபிலாசைகளை வெளிப்படுத்த ஓர் வினைத்திறனுடனான களம் காணப்படவில்லை. எனவே இதற்கான ஓர் வெளியை அல்லது களத்தினை ஏற்படுத்தும் நோக்கிலேயே அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு உருவாக்கப்பட்டது. இத்துடன் இவ்வலையமைப்பானது இவர்களின் பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்கும் குரல் கொடுக்கும் தூதனாகதூரநோக்குச் சிந்தனைகளையும் ஆக்கபூர்வமான மனப்பாங்குகளையும் மற்றும் நிபுணத்துவ அறிவையும் ஊக்குவித்து அதனை சக்திமயப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

மேற்படி நோக்கத்தோடு கடந்த காலங்களில் சிவில் சமூகங்களின் மத்தியில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களையும் நிபுணத்துவமான விவாதங்களையூம் ஏற்படுத்தியது. இந்த செயற்பாடுகளிற்கூடாக தங்கள் ஆதங்கங்களையும் அபிலாசைகளையும் சிவில் சமூகங்கத்தினர் வெளிப்படுத்தி கலந்துரையாடி விவாதிக்கும் வெளி உருவானது. இதன் போது சொந்தக் காணிகளை இராணுவம் அபகரித்துள்ளமை மற்றும் காணி முரண்பாடுகள் காணாமல்போனோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்காமை சிவில் சமூகத்தின் செயற்பாடுகள் மீதான இராணுவத் தலையீடுகள் மனிதவுரிமை பாதுகாப்பின்மை சமூகப் பாதுகாப்பின்மை அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினைகள் என தாங்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் இங்கு ஆராயப்பட்டன. குறித்த விவாதங்களின் போது சிவில் சமூகங்களின் மீது தொடரும் அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் மற்றும் அவர்கள் மீதான அழுத்தங்கள் தொடர்பில் பொpதும் அக்கறை காட்டியமையை அவதானிக்கமுடிந்தது. இதனை நன்கு உணர்ந்த அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சிவில் சமூக ஒருங்கினைப்பின் அவசியத்தை புரிந்து கொண்டு சிவில் சமூக அமைப்புக்களின் வலையமைப்பொன்றினை உருவாக்கியது. ஒருங்கினைந்த சிவில் சமூக அமைப்புக்கள் கூடி ஆராய்ந்து “ தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சிவில் சமூகம்”; என்ற பெயரில் இதன் செயற்பாடுகளை ஆரம்பித்து தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் சனநாயக மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகத்தினரின் அடிப்படைப் பிரச்சனைகளை மற்றும் இனமுரண்பாட்டின் வரலாற்றுக் காரணிகளை புறம்தள்ளி வைத்ததோடு போதிய வினைத்திறன் மிக்க முன்னெடுப்புக்களை மேற்கொள்ளாத சூழ்நிலையே தற்போது காணப்படுகிறது.

எனவே இனமுரண்பாட்டிற்கான தீர்க்கமான முடிவுகளை எட்டுவதற்கும் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரமான வாழ்வியலை உறுதிப்படுத்தவும் சிவில் சமூக அமைப்புக்களை ஒருங்கினைத்து வினைத்திறன் மிக்க உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் ஊடாக கருத்துக்களை மற்றும் முடிவுகளை நிரந்தர அரசியல் தீர்விற்கு முன் வைக்கும் ஓர்  பாரிய பங்கினை இவ் வலையமைப்பு முன்னெடுக்க முனைகிறது. இது இதுவரை நிகழ்ந்து வந்த மேலிருந்து கீழ்நோக்கிய அனுகுமுறையை இல்லாது செய்து கீழிருந்து மேல்நோக்கிய அர்த்தபுஷ்டியான மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கினைக்கப்பட்ட சிவில் சமூக நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. இதனூடாக இன ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் எதிரான சுயநல அரசியல் போக்கினையூம் மாற்றியமைக்க முடியுமென உறுதியாக நம்புகிறது.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நிகழ்ந்த ஆ மாற்றம் முழு இலங்கைத் தீவிலும் சனநாயகச் சூழலை சிவில் வெளியில் ஒப்பீட்டளவில் மேம்படுத்தியிருக்கின்றது என்பதை சிங்கள தமிழ் முஸ்லிம் சிவில் சமூகங்கள் ஏற்றுக்கொள்கின்றன. ஆட்சி மாற்றத்திற்கு முன்புவரை ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருதொகுதி தனிநபர்களிடமும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமும் நாட்டின் அதிகாரமும் வளங்களும் குவிக்கப்பட்டிருந்த நிலைமாறி மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரம் ஒப்பீட்டளவில் கைமாறியிருப்பதை மூன்று இனங்களையும் ர்ந்த சிவில் சமூகத்தினகள் ஏற்றுக்கொள்கின்றார்கள்.

முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித உமை மீறல்கள் மோசடிகள் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பாக புதிய அரசு மேற்கொண்டுவரும் சட்டரிதியிலான நடவடிக்கைகளை மூவினங்களையூம் சேர்ந்த சிவில் சமூகங்கள் வரவேற்கின்றன. ஆனால் மேற்படி மாற்றங்கள் அனைத்தும் மேலோட்டமானவைதான் என்றும் அடிப்படையான விவகாரங்களின் மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான அரசியல் திடசங்கட்பம் இந்த  அரசாங்கத்திடம் போதியளவு இருக்கின்றதா என்றசந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக பெரும்பாலான தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பின்வரும் அடிப்படை விவகாரங்களில் பண்பு மாற்றங்களை ஏற்படுத்தவல்ல முடிவுகளைஎடுக்கத் தேவையான அரசியல் திடசங்கற்பத்தை இவ் புதிய அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று தமிழ் சிவில் சமூகத்தவர்கள் கருதத்தக்க விதத்திலையே கடந்த பத்து மாத கால ஆட்சிமாற்ற சூழல் காணப்படுகின்றது.

இவ்வாறு தமிழ் சமூகத்தினாலும் ஒருபகுதி சிங்கள முஸ்லிம் சிவில் சமூகங்களினாலும் சுட்டிக்காட்டப்படும் அடிப்படையான விவகாரங்கள் பின்வருமாறு.

1. ஒற்றையாட்சிக்கு வெளியே சென்று ஒரு தீர்வை கண்டறிவது.

i. அவ்வாறு ஒற்றையாட்சிக்கு வெளியே சிந்திக்கத்தயாராக இருக்குமிடத்து பாதுகாப்பு காணி நிதிக்கையாளுகை போன்ற விவகாரங்களில் அடிப்படையான மாற்றங்கள் இதுவரையிலும் செய்யப்படவில்லை.

ii. பாதுகாப்புத் தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படாதுவிட்டால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது பற்றியோ அல்லது இராணுவமய நீக்கம் பற்றியோ உரையாட முடியாது.

iii. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காமல் அரசியல் கைதிகள் தொடர்பாக தீர்க்கமான முடிவூகள் எடுக்கமுடியாது. இராணுவமய நீக்கத்தைப் பற்றி உரையாடாது உயர் பாதுகாப்பு வலையங்களைப் பற்றி உரையாட முடியாது. உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றாது மீள்குடியேற்றம் பற்றி உரையாட முடியாது. எல்லாவற்றையும் விட அடிப்படையாக இது தமிழ் மக்களின் காணி உரிமை பற்றிய ஒரு விவகாரம் ஆகும். அரசியல் சுயலாபங்களைக் கருத்தில் கொண்டு வடக்கையும் கிழக்கையும் இரண்டாகப் பிhpத்தமைமை வடமாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் காணிகளை சட்டத்திற்கு விரோதமாக அபகரித்ததுடன் காணி மாற்றங்களையும் நிறுவனமயமாக்களை மேற்கொண்டதோடு உரியவர்களுக்கான காணி உரிமைப் பத்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்படாமையும் இன்னும் தொடாகிறது. இவ் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சரியான பொறிமுறைகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.

2. போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரங்களைப் பற்றியது.

i. இறுதி யுத்தத்தின் போது மிகவும் பாரதூரமான மனிதாபிமானமற்ற போர்க்குற்றங்கள் நடைபெற்றுள்ளது என்பதோடு இந்த போர்க்குற்றங்ளுக்குப் பொறுப்பானவர்களும் இதனை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்த பொறுப்பு வாய்ந்த தரப்பினரும் பொறுப்புக்கூறலில் இருந்து விலகிவிட முடியாது.

ii. ஆயூத யுத்த முடிவூடன் வடகிழக்கில் மாத்திரமின்றி நாடுமுழுவதிலும் மனிதவூரிமை மீறல்கள் நிகழ்ந்ததோடு இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சம்பந்தப்பட்டவாகள் புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்வதூடாகவும்.

iii. யுத்தத்தினைத் தொடர்ந்து சர்வதேச சமூகத்தினடம் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறியபோதும் நாடுமுழுவதிலுமுள்ள சிறுபாண்மைச் சமூகத்தினர் மீது திட்டமிட்ட வன்முறைகளும் மனிதநேயமற்ற செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன என்பதை ஏற்பதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களை நல்லிணக்க நடவடிக்கைகளில் நம்பிக்கை வைத்து ஈடுபடவைக்கமுடியும்.

iஎ. தமிழ் மக்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்ப வேண்டும். இன நல்லிணக்கத்திற்கான தவிர்க்கப்பட முடியாத கட்டாயமான முன் நிபந்தனை அது. நீதியே நல்லிணக்கத்திற்கான அடித்தளமாகும். நல்லிணக்கம் இல்லையெனில் இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வு குறித்து சிங்கள சிவில் சமூகத்தின் திரட்டப்பட்ட ஆதரவினைப் பெறுவது கடினம். சிங்கள சிவில் சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவினைத் திரட்டாமல் அரசியல் அமைப்பினைமறு வரைபு செய்யமுடியாது.

எ. சிங்களஇ தமிழ் முஸ்லிம் சிவில் சமூகங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் உண்மை வெளிப்படையாகப் பேசப்படும் ஒரு அரசியல் சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சுகப்படுத்தப்படாத கூட்டுக் காயங்களையும் மனதுக்குள் சந்தேகங்களையும் முற்கற்பிதங்களையும் பிழையான முடிவுகளையும் பழிவாங்கும் உணர்ச்சிகளையும் பேசிக் கொண்டு இலங்கைத் தீவின் சிவில் சமூகங்கள் எப்படி மனம் திறந்து உரையாட முடியும்.

எனவே உண்மை வெளிப்படையாகப் பேசப்படுகின்ற நீதி நிலைநாட்டப்படுகின்ற ஒரு விசாரனைச் சூழலை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆட்சி மாற்றத்தின் பின் இலங்கைத் தீவு எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும் மேற்கண்ட இரண்டு அடிப்படைப் பிரச்சனைகளுடன் தொடர்புடையவைதான். இந்த அடிப்படைப் பிரச்சனை தொடர்பிலான அரசாங்கத்தின் சிந்தனை முறைகளில் அடிப்படையான பண்பு மாற்றங்கள் நிகழவில்லையானால் அரசியல் அமைப்பு மறுவரைபு எனப்படுவது இறந்த காலத்தில் எதையுமே கற்றுக்கொள்ளத் தவறியதாகவே அமையக்கூடும். அத்துடன் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் போலியானதாகவும் மேலோட்டமானதாகவுமே அமைந்துவிடும்.

எனவே அரசியல் அமைப்பு மறுவரைபில் இலங்கைத் தீவின் சிவில் சமூகங்கள் ஆக்கபர்வமான விதத்திலும் வினைத்திறனோடும் பங்காற்றுவதற்கான ஓர் அரசியல் சூழல் எனப்படுவது அடிப்படையான விவகாரங்களில் ஏற்படக்கூடிய பண்பு மாற்றங்களிலேயே தங்கியிருக்கின்றது.

கடந்த நவம்பர் மாதம் 23இ 24இ 25ம் திகதிகளில் YMCA கேட்போர் கூடத்தில் AFRIEL அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலங்கைத் தீவின் சிவில் சமூகங்களுக்கிடையிலான சந்திப்பின் போது தொகுக்கப்பட்ட அபிப்பிராயங்களின் சாராம்சமாக உருவாக்கப்பட்டதே இவ் அறிக்கை. இது ஒரு தொடக்கப்புள்ளியே.

2009ம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான அரசியல் சூழலில் மூவினத்தைச் சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கூடிக்கதைத்த சந்தர்ப்பம் என்று பார்த்தால் இது ஒரு அரிதான நிகழ்வே.

ஒரு தொடக்க முயற்சி என்ற வகையில் போதாமைகள் கருத்து வேறுபாடுகள் விமர்சனங்கள் இருக்கமுடியும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்கிறோம்.

இவ் அறிக்கையில் கூறப்பட்டிருப்பவை முடிந்த முடிவுகள் அல்ல. இவை தொடா;பாக மேலும் விவாதிக்கப்பட வேண்டும். மூவின சிவில் சமூகங்களும் இது தொடர்பில் மனம் திறந்து உரையாட வேண்டும் என உறுதியாக நம்புகிறோம்.

நல்லிணக்கம் எனப்படுவது ஒரு தொடர் முன்னெடுப்பு ஆகும். அதற்கான நம்பிக்கையுட்டும் ஒரு தொடக்கப்புள்ளி இது. இங்கிருந்து தொடங்கி இச் சிறிய தீவின் அரசியல் அமைப்பை கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் பல்லினத்தன்மை மிக்கதாகவூம் ஒற்றையாட்சி முறைக்கு வெளியே வந்து மறுவரைபு செய்யூம் ஓர் உன்னதமான இறுதி விளைவை நோக்கி நகர்வதே மேற்படி சந்திப்பின் இறுதி இலக்காகும். இச் சந்திப்பின் போது சிவில் சமூக பிரதிநிதிகள் தொpவித்த கருத்துக்கள் வருமாறு.

1. தேசியப் பிரச்சினைக்கான நிலையான அரசியல் தீர்வொன்றானது இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து சமூகங்களையும் ஒன்றினைத்தாக இந்த நாட்டிற்குள்ளேயே காணப்படுதல் வேண்டுமென்பது எமது கருத்தாகும்.

2. அத்தகைய தீர்வானது சனநாயகக் கோட்பாடுகள் மனித உரிமைகள் அரசியலமைப்பு மேலாண்மை சட்டவாட்சி மற்றும் ஒவ்வொரு சமூகத்தினாpனதும் கலாசார மொழி சமய உரிமைகளுடன் இணைந்ததான அரசியல் குடியியல் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை அனுபவித்தல் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் வினைத்திறனான பங்கெடுப்பு மற்றும் சமத்துவத்துக்கான உரிமை என்பவற்றை நிலைப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்.

3. தேசிய பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றைக் காணும் விடயத்தில் அரசியல் அதிகாரமானது மத்தியில் குவிக்கப்படலாகாதென்பதுடன் பகிரப்படுதல் வேண்டும் என்பது முக்கியமான வழிவகைகளுள் ஒன்றாகும்.

4. இந்த விடயத்தில் மக்களின் அரசாங்க அதிகாரங்களானவை மத்திய அரசாங்கத்திற்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலும் பகிரப்படுதல் வேண்டும் என்பதுடன் அவை மக்களால் தெரிவூசெய்யப்பட்ட பிரதிநிதிகளால் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதுவூம் எமது ஆழமான கருத்தாகும்.

5. மேலும் பிராந்தியங்களானவை சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மட்டுமன்றி பிராந்திய மக்களினுடைய பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தினை நிலைநாட்டும் வகையிலும் முழுமையான பொலிஸ் அதிகாரங்களை கொண்டிருக்க வேண்டுமென நாம் தீர்மானிக்கிறோம்.

6. தனியார் காணிகள் தவிர்ந்த ஏனைய காணிகள் மீதான   அதிகாரங்களை பிராந்தியங்கள்; கொண்டிருத்தல் வேண்டும்.

7. மொழி கல்வி சுகாதாரம் தொழில்வாய்ப்பு பொது நிர்வாகம் ஊடகம் உட்கட்டமைப்பு மற்றும் கலாசாரம் ஆகிய விடயங்களில் தங்களுடைய அபிலாஷைகளை வினைத்திறனாக அனுபவிக்கும் வகையில் அதிகாரங்களை பிராந்தியங்கள் கொண்டிருக்க வேண்டும்.

8. பிராந்தியத்தினது நிறைவேற்று அதிகாரமானது ஆளுநரிடம் வழங்கப்படக்கூடாதென்பதுடன் பிராந்தியத்திற்கு பதிலளிக்கக்கூடிய அமைப்பொன்றிடம் வழங்கப்படுதல் வேண்டும்.

9. நீதித்துறைச் சுதந்திரமாக பாதுகாக்கப்படுதல் வேண்டுமென்பதுடன் நீதித்துறையானது நீதியை நிலைநிறுத்தும் வகையில் செயற்படுதலும் வேண்டும்;.

10. தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையானது இல்லாதொழிக்கப்படுதல் வேண்டுமென்பதுடன் அதனிடத்தில் தொகுதிவாhpப் பிரதிநித்துவ முறைமை பதிலீடுசெய்யப்படுதல் வேண்டுமென நாம் முன்மொழிகிறௌம். மேலும் பெண்கள் மற்றும் இளம் ஆட்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படவேண்டுமெனவூம் வலியுறுத்துகிறௌம். அத்துடன் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர்கள் தெரிவூசெய்யப்பட்ட அமைப்புக்களில் ஏனைய வழிவகைகளிலினூடாக அங்கத்துவம் வழங்கப்படக்கூடாது எனவூம் தீர்மானித்துள்ளோம். மேலும் அத்துடன் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கைப் பிரசைகளுக்கும் வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறோம்.