பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்ப வவுனியாவில் ஒன்று கூடிய இளைஞர், யுவதிகள்

Tamil CNN, 10 December 2016

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் இளைஞர், யுவதிகள் ஒன்று கூடியுள்ளனர்.

அன்புக்கும், நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது.

பாராபட்சமற்ற சமூகத்தை கட்டுயெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளில் கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் நிகழ்வின் ஒரு கட்டமாக இன்று வவுனியாவில் மூன்று இனங்களையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் ஒன்று கூடி பாராபட்சமற்ற சமூகத்தை கட்டியழுப்புவோம் என உறுதியெடுத்துக் கொண்டனர்.

இதேவேளை, குறித்த நிகழ்வு நாளை முதல் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியை நோக்கி நகர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.