பாரபட்சம் காட்டுதலுக்கெதிரான இளைஞர்களின் செயலணி..!

Vaanvili, 1 December 2016

அன்புக்கும் நட்புக்குமான வலயமைப்பு எதிர்வரும் மனிதஉரிமைகள் தினத்தை முன்னிட்டு பாரபட்சம் அற்ற சமூகத்தை கட்டியெழுப்பும் தொனிப்பொருளில் இலங்கையில் உள்ள 20க்கு மேற்பட்ட மாவட்டங்களில் விழிப்புணர்வு செயற்திட்டத்தை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவ் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தனர்.

எதிர்வரும் மார்கழிமாதம் 06 திகதியிலிருந்து 20ம் திகதிவரையில் இலங்கையில் 20 மாவட்டங்களில் பின்தங்கிய ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமப்புறங்களில் இளைஞர்கள் அணிதிரண்டு பாரபட்சம் காட்டுதலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளதாக அவ் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் வான்விழி செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தனர்.

இவ் ஊடக சந்திப்பில் அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் தலைவர் சிவராசா பிரதீப், இலஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ரவீந்திர டீ சில்வா, சிவில் சமூக செயற்பாட்டாளர் இ. இராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த ஊடகசந்திப்பிலேயே பாரபட்டசம் காட்டுதல் தொடர்பான தெழிவூட்டலை வழங்கினர்.