மனித உரிமைகள் மற்றும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கருத்தாடல்

Tamil Win, 10 December 2017

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த மூவின இளைஞர்களை ஒன்றிணைத்து மனித உரிமைகள் மற்றும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான கருத்தாடலொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கருத்தாடல் அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

மனித உரிமைகள் தினமான இன்று அன்புக்கும் நட்புக்குமான அமைப்பின் தலைவர் ரவீந்திர டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது அவர் மனித உரிமைகள் மற்றும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக கருத்துரை வழங்கியதுடன் இளைஞர், யுவதிகளினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதில் வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் தமிழ், சிங்கள, முஸ்லிம், இளைஞர் மற்றும் யுவதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.