மீள்குடியேற்றதை துரிதப்படுத்தக் கோரி வலி வடக்கு மக்கள் போராட்டம்

Global Tamil News, 27 June 2016

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

தமது மீள்குடியேற்றதை துரிதப்படுத்துமாறு கோரி   வலி வடக்கு மக்கள்  யாழ் நல்லூர் கோயில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

6 மாதங்களுக்குள் உங்களை மீளக்குடியேற்றுவேனென  ஜனாதிபதி தெரிவித்த வாக்குறுதி  இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் மேலும் 08 அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

அத்துடன்  ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் மகஐர் ஒன்றைக் கையளித்த  ஆர்ப்பாட்டக்காரர் அதன் பிரதியை வடமாகாண ஆளுனர், வடமாகாண முதலமைச்சர் மற்றும் மனித உரிமைகள் காரியாலத்திலும் மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திலும் கையளித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஐா, சிவஞானம் சிறிதரன்,  ஈ. சரவணபவன் மற்றும் ஈழ மக்கள் ஐனநாயகட்சியின் ஆதரவாளர்கள், சிவில் சமூக அமைப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.