வவுனியாவில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடல்..!!

News Vanni, 10 December 2017

புதிய அரசியல் யாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று அன்புக்கும் நட்புக்குமான வலய அமைப்பினரால் இன்று (10.12.2017) வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியோன்றில் நடைபெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில் இளைஞர், யுவதிகளுக்கு புதிய அரசியல் யாப்பு தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கடந்தகால அரசியல் யாப்பு பற்றியும், அதன் பலம் பலவீனம் தொடர்பாகவும், அரசியல் யாப்பின் பண்புகள் தொடர்பாகவும், இலங்கையிலுள்ள இனப்பிரச்சனை மற்றும் ஏனைய தீர்வுகளுக்கு புதிய அரசியல் யாப்பிலுள்ள முக்கியத்துவ தேவை தொடர்பாகவும் விளக்கமளித்திருந்ததுடன் அரசியலமைப்பு தொடர்பான இளைஞர் யுவதிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.

கடந்த காலங்களில் இளைஞர் யுவதிகளுக்கான அரசியல் அறிவூட்டல் செயல்பாடுகளை அன்புக்கம் நட்புக்கமான வலையமைப்பு முன்னெடுத்து வந்திருந்தது.

இந்நிகழ்வில் தமிழ்,சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.