18 வயதை பூர்த்தி செய்யும் அனைவருக்கும் வாக்குரிமை – தேசப்பிரிய

Puthyavan News, 15 August 2016

18 வயதை பூர்த்தி செய்யும் சகலரும் தேர்களின் போது வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளராக பதிவு செய்ய முடியும் என்ற போதும் அவர்கள் 19 வயதை தாண்டிய பின்னரே வாக்களிக்க கூடியதாக இருப்பதாகவும் இதனை மாற்றியமைக்கும் வகையில் சட்டத்தை அமைக்க
வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களினுடைய வாக்குரிமையை பாதுகாப்பது தொடர்பில் வழக்கு தாக்கல் ஒன்றை முன்வைப்பதற்காக AFRIEL அமைப்பின் தலைவர் ரவீந்திர டீ சில்வா அவர்களும் இளைஞர் பிரதிநிதிகளான சிவராசா பிரதீப், சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடந்த 09.08.2015 அன்று காலை விஜயம் மேற்கொண்டு வழக்கினை பதிவுசெய்தமை சுட்டிக்காட்டத்தக்கது.