AFRIEL News Release Regarding Omanthai Checkpoint Removed

ஓமந்தை சோதனைச்சாவடி மூடப்பட்டுள்ளமை தொடர்பான ஊடக அறிக்கை இலங்கையில் நடைபெற்ற கொடூரயுத்தம் 2009ம் ஆண்டு நடுப்பகுதியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதும், மக்களின் நாளாந்த வாழ்கையில்  இராணுவத்தலையீடு பெரும் பாதிப்பை செலுத்தியது. அதனடிப்படையில், வடக்கு – கிழக்கு இணைப்பு பாலமாக உள்ள A9 வீதியின் ஓமந்தை சோதனைச்சாவடி யுத்தத்தின் பின்பும் ஒரு அசாதாரண தொனியினை புலப்படுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தற்போது இந்த சோதனை நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளமையினை அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு (AFRIEL) வரவேற்கின்றது.