மக்களை சமத்துவமாக நடத்துவதென்றால் மத முன்னுரிமை எதற்கு?

Tamil Mirror, 11 December 2017 க.அகரன, டி.விஜித்தா அரசாங்கத்தின் பாதுகாப்பினால் தான் ஒரு சமயம் தப்பிப் பிழைக்குமாக இருந்தால், அது ஓர் உருப்படியான சமயமாக இருக்க முடியாது. ஒரு நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமத்துவமாக நடத்தப்படுவதாக இருந்தால், அரசிசமைப்பில் குறித்த ஒரு மதத்தை முதன்மையானது எனக் குறிப்பிடுவது தவறானது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது : வவுனியாவில் எம்.எ.சுமந்திரன்!!

Vavuniya Net, 10 December 2017 புதிய அரசியல் யாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று அன்புக்கும் நட்புக்குமான வலயமைப்பினரின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10.12.2017) வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது.

மனித உரிமைகள் மற்றும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கருத்தாடல்

Tamil Win, 10 December 2017 வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த மூவின இளைஞர்களை ஒன்றிணைத்து மனித உரிமைகள் மற்றும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான கருத்தாடலொன்று நடைபெற்றுள்ளது. குறித்த கருத்தாடல் அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

சமகளம் அரசாங்கத்தின் பாதுகாப்பினால் தான் தப்பிப் பிழைக்குமாக இருந்தால் பௌத்தம் உருப்படியான சமயமாக இருக்க முடியாது: சுமந்திரன் எம்.பி – சமகளம்

Samakalam, 12 December 2017 அரசாங்கத்தின் பாதுகாப்பினால் தான் ஒரு சமயம் தப்பிப் பிழைக்குமாக இருந்தால் அது ஒரு உருப்படியான சமயமாக இருக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மக்களுக்கான புதிய அரசியலமைப்பு தொடர்பில் இளைஞர், யுவதிகளுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டத்தில் அதிதியாக கலந்து கொண்டு இளைஞர், யுவதிகளின் கேள்விக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார். […]

வவுனியாவில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடல்..!!

News Vanni, 10 December 2017 புதிய அரசியல் யாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று அன்புக்கும் நட்புக்குமான வலய அமைப்பினரால் இன்று (10.12.2017) வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியோன்றில் நடைபெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில் இளைஞர், யுவதிகளுக்கு புதிய அரசியல் யாப்பு தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.